அஜீத்தின் வழியில் பின்தொடரும் ஜெய் !!!
நடிகர் ஜெய் சினிமாவில் ஒரு சாக்லேட்பாய் மாதிரி வந்து நடித்துவிட்டு போகிறார் என்றுதானே இதுநாள்வரை நமக்கு தெரியும். அவருக்குள் ஒரு கார் ரேஸ் வீரன் ஒளிந்திருக்கிறான் என்பது யாருக்காவது தெரியுமா? சிறுவயதிலிருந்தே அவரது இரண்டு ஆசைகள் ஒன்று மியூசிக்.. இன்னொன்று கார் ரேஸ். இப்போது கார் ரேஸில் கலந்துகொள்வதற்கான லைசென்ஸை பெற்றிருக்கிறார் ஜெய்.
ஏற்கனவே சில உள்ளூர் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் ஜெய், “தற்போது இந்த லைசென்ஸை பெற்றிருப்பது எனக்கு த்ரில்லாக இருக்கிறது.. இது என் சிறுவயது கனவு” என்கிறார் பூரிப்பாக. இந்த லைசென்ஸ் மூலம் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஜெய். கார் ரேஸ் பிரியரான அஜீத்திற்கு கார் ரேஸ் பற்றி பேச சினிமாவிலேயே இன்னொரு நபர் பேச்சுத்துணைக்கு கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.